Asianet News TamilAsianet News Tamil

இறுதி கட்டத்தில் ஜெயலலிதா மரண விசாரணை... முக்கிய சாட்சியான தம்பிதுரையிடம் கிடுக்குப்பிடி..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகியுள்ளார். நேற்று சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் ஆஜராகியிருந்த நிலையில் இன்று தம்பிதுரை ஆஜராகியுள்ளார்.

jayalalaitha murder issue...thambidurai Appear
Author
Tamil Nadu, First Published Jan 22, 2019, 10:58 AM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகியுள்ளார். நேற்று சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் ஆஜராகியிருந்த நிலையில் இன்று தம்பிதுரை ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. jayalalaitha murder issue...thambidurai Appear

இதுவரை முன்னாள் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதா உறவினர்கள் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி சுமார் 7 மணிநேரம் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

jayalalaitha murder issue...thambidurai Appear

ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆணைய வழக்கறிஞர் சரமாரியாக எழுப்பினார். இதில் முக்கியமாக கருத்தில் கொள்வது என்னவென்றால் ஜெயலலிதாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து ஓபிஎஸ்சிடம் எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை குறித்து விளக்கியதாக விஜயபாஸ்கர் கூறினார். jayalalaitha murder issue...thambidurai Appear

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகியுள்ளார். இவர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது தம்பிதுரை பல நாள் அப்பல்லோ வந்திருந்தார். ஜெயலலிதாவை பார்க்க ஆளுநர் வந்திருந்தபோது அப்பல்லோவில் தம்பிதுரை இருந்தார். ஆகையால் இவரிடம் ஆணையம் விசாரணை நடத்தும் போது பல முக்கிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios