காஞ்சி  ஜெயேந்திரர் காலமானார்

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த  காஞ்சி  சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சிபுரத்தில்,ஜெயேந்திரருக்கு சொந்தமான மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,இன்று காலை உயிரிழந்தார் ஜெயேந்திரர்.

கடந்த மூன்று மாதங்களாகவே உடல் நல குறைவுடன் காணப்பட்டு வந்துள்ளார் ஜெயேந்திரர்.

காஞ்சி மடத்தின் 69 ஆவது சங்கராச்சாரியாராக இருந்தவர் ஜெயந்திரர். இவருக்கு வயது  82 .

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஜெயேந்திரர் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

இவருடைய இறப்பை அறிந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்கள்  அதிருப்தி  அடைந்துள்ளனர்.