Jawahirullah surrender in court

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்ற வழக்கில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகப் பணம்பெற்றதாக, கடந்த 2000 ஆம் ஆண்டு, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்லமுகமது களஞ்சியம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2011 ஆம் வருடம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மற்ற 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

மேலும் சிறைதண்டனை விதிக்கப்பட்ட 5 பேருக்கும் ரூ.1,40,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எழும்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

ஆனால், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும், கால அவகாசம் கேட்டனர். ரம்ஜான் நோன்பு காரணம் காரணமாக ஒரு வார காலம் அவகாசம் கேட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களின் ஒருவார கால அவகாசம் முடிந்ததை அடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் உத்தரவிட்டது. இதையடுத்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட 5 பேரும் இன்று சரணடைந்தனர்.