ஜன.17 எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் ஜெ. – NEWSFAST EXCLUSIVE தகவல்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா, வரும் ஜனவரி 17ம் தேதி, எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 46 நாட்கள் உருண்டோடி விட்டன. பதிறி போன அதிமுக தொணடர்கள் அன்றிலிருந்து இன்று வரை கோயில், குளம் என தங்களது தலைவி நலம் பெற வேண்டி சுற்றி வருகின்றனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், பல்வேறு வதந்திகள் ரெக்கை கட்டி பறந்தன. வதந்தி தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு, தற்போது விடுதலை ஆகியுள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவும், அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்பது தெரியவந்தது.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் NEWSFAST குழு சரியான தகவல்கள்அளித்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரமே நார்மல் வார்டு எனப்படும், சாதாரண அறைக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார் என தெரிவித்து இருந்தோம்.

நாம் சொன்னதுபோலவே, முதலமைச்சர் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால், புதிய அறையில் உறக்கம் சரியாக இல்லை என்பதால், மீண்டும் பழைய அறைக்கே மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சரின் உடல்நிலை நன்றாக தேறியவுடன் தான், தைரியத்தோடு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்பல்லோ ரெட்டி. தனது பேட்டியின்போது, டிஸ்சார்ஜ் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என அவர் தெரிவித்து இருந்தார்.

அவர் கூறியது, முற்றிலும உண்மைதான். அதாவது, தனக்கு என்ன வேண்டும் என்பதை முதலமைச்சர் ஜெயலலிதவே கேட்டு பெற்று கொள்வதாகவும், சிறு சிறு கட்டளைகளை பிறப்பிப்பதாகவும் தெரிகிறது.

இறுதியாக டிசம்பர் 6 அல்லது 7ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம் என டாக்டர்களிடம், முதலமைச்சர் தெரிவித்ததாக, நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வரும் ஜனவரி 17ம் தேதி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, ஜெயலலிதா நேரில் சென்று, மாலை அணிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிட்டதட்ட கடந்த ஒன்றரை மாதகாலமாகவே சோர்ந்து போயிருந்த அதிமுக தொண்டர்கள், 17ம் தேதி, ஜெயலலிதா மக்களை சந்திக்க வந்தால், இழந்த புத்துணர்ச்சியை மீண்டும் பெறுவார்கள்.