நான் தமிழச்சி… தமிழ் சமுதாய உணர்வுக்கு என்றுமே துணை நிற்பேன்… நடிகை திரிஷா விளக்கம்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு தமிழகமே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள் கமல், ரஜினி, சிம்பு,விஜய் இயக்குநர்கள் பாரதிராஜா,அமீர்,ராம்,கவுதமன் இளையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பின் மீது பொது மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் திரிஷா. நடித்து வரும் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை அருகே நடைபெற்று வந்தது.

பீட்டா ஆதரவு நடிகை திரிஷா நடித்துக் கொண்டிருப்பதை அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், அவருக்கு எதிராக முழக்கமிட்டதோடு ஓட ஓட விரட்டியடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்னைப்பற்றி கேவலமான முறையில் சித்தரிப்பதுதான் தமிழர் கலாச்சாரமா என கேள்வி எழுப்பி இருந்தார். நீங்கள் எல்லாம் தமிழர்களா? என கெள்வி எழுப்பியிருந்தார். மேலும் பீட்டா அமைப்புக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்போவதாக திமிராக பதில் அளித்திருந்தார்,

திரிஷாவின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழர் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கு திரிஷாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.

வார இறுதி நாட்களில் குடியும்,கூத்தும் என போதையில் முழுகும் திரிஷா, தமிழ் கலாச்சாரம் குறித்து பேசலாமா என சரமாரியாக கமூக வளைதளங்களில் காய்ச்சி எடுத்தனர்.

இந்நிலையில் நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என நடிகை திரிஷா விளக்கம் அளித்துள்ளார். நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமையடைகிறேன்..தமிழ் சமுதாயத்தையும், பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவள் நான் என கூறியுள்ளார். மேலும் தமிழ் சமுதாய உணர்வுக்கு என்றுமே துணை நிற்பேன் என்றும் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.