பீட்டாவை வெளியேற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை….சசிகலா உறுதி..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாகஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜல்லிக்கட்டு உரிமையைமீட்டெடுக்க இன்று போராடி வரும் தமிழக மக்களின் கொதிநிலை கொண்ட அதே மனநிலையில் தான் அதிமுக வும் தமிழக அரசும் சரி ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.. 

உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் குறிப்பாக, திராவிட அரசியலில் மாபெரும் வரலாற்றுப்புரட்சிகளுக்கெல்லாம் வாய்க்கால் வகுத்த பெருமை மாணவச் செல்வங்களின் எழுச்சிக்கும், புரட்சிக்கும் உண்டு என தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மாணவச் செல்வங்களின் கல்வி, இளைஞர்களின் வேலை வாய்ப்பு, ஏழை, எளிய குடும்பங்களின்பொருளாதார பின்புலம் இவற்றில் எத்தகைய இடர்களும், இடையூறுகளும் இப்போராட்டங்களால் ஏற்பட்டுவிடக் கூடாதுஎன்பதைக் கருத்தில் கொண்டு, அதிமுக வும், தமிழக அரசும், மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்குமிக உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 


இவையாவிற்கும் மேலாக, மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் உணர்வுகளுக்குமதிப்பளிக்கின்ற வகையில், வரவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரானதடையை முற்றிலுமாக நீக்கிடக் கோரும் தீர்மானத்தை முன்மொழியவும், அதனை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்தகுரலால் நிறைவேற்றவும் வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.


மேலும், அந்நிய நாட்டில் உருவான அமைப்பாகிய `பீட்டா' தமிழ் நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு குந்தகம்விளைவிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்ட ரீதியாகமேற்கொள்வோம் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.