தேசிய கீதம் பாடிய போராட்டக்கார்கள்…போலீசார் வெளியேற்றுவதை தடுக்க..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி உலகம் எங்கும் தமிழர்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இந்தப்போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது,

சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டத்தில ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீசார் திடீரென குவிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேறுமாற எச்சரிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் போலீசார் கைகளில் லத்தி இல்லை.

அதே நேரத்தில் இளைஞர்களை பிடித்து தள்ளி வெளியேற்றி வருகின்றனர். பெண்களை பெண் போலிசார் குண்டு கட்டாக வெளியேற்றினர். ஒரு கட்டத்தில் போலீசார் தங்களை வெளியேற்றாமல் இருக்க தேசிய கீதத்தை பாடினர். இதனால் அவர்களை தொட முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.