ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பீட்டா எதிர்ப்பாக மாறி , பீட்டா அமெரிக்க நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு மறியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக நான்கு நாட்களுக்கும் மேலாக வீட்டுக்கு செல்லாமல் வீதிகளில், வாடிவாசல் முன்பு , மெரினா கடற்கரையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை பேருந்துகள்,கால்டாக்சி,ஆட்டோ எதுவும் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் நர்சரி,ப்ரைமரி,மெட்ரிக்,சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை இயங்காது என தனியார் பள்ளிகள் சங்க பொது செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.