வரலாறு காணாத எழுச்சியை தொடர்ந்து இளைஞர் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு கவர்னர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் இயக்கம் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று நடந்து கொண்டிருக்கிறது.இதனுடைய எதிரொலியாக தமிழக முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார்.

மாநில அரசும் மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவசர சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.அப்போது மத்திய சட்ட அமைச்சகம் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற்று குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது.

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து உடனடியாக கவர்னருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவசர சட்டம் பிறப்பித்து கவர்னர் அறிவித்தார்.

இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படுகிறது. அடுத்த 6 மாதத்திற்குள் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஜல்லிக்கட்டு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் ஜல்லிகட்டை சிக்கல் இலலமல் நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் முதல்வர் ஓபிஎஸ்சும் இன்று 8.45 மணிக்கு மதுரை செல்கிறார்.

அவரும் அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வாடிவாசல் இருக்கும் அலங்காநல்லூரில் அரசு சார்பில் வாடிவாசல் பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுத்தபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாடிவாசல் சுவற்றுக்கு புதிய பெயின்ட் அடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் துப்புரவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ப்ளீச்சிங் பவுடர்கள் தெளிக்கபட்டு வருகிறது.