ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தடியடி தாக்குதலில் போராட்டக்காரகள் தவிர குழந்தைகள் சிறுவர்கள் காயம் அடைந்தனர்.

அலங்கா நல்லூரில் பல மணி நேரம் நடந்த போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது. சாலையில் அமர்ந்து நடந்த மறியல் போராட்டம் முடிவில் கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய தடியடி காரணமாக அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் திடீர் தடியடி நடத்தியதை அடுத்து கிடைத்த அனுபவத்தில் அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு வழக்கு தொடுத்து தடை வாங்கியது , உச்சநீதிமன்றமும் தடை விதித்தது , இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. 

இதை எதிர்த்து தங்கள் உணர்வை காட்டும் விதத்தில் அலங்காநல்லூரில் கூடினர். அமைதியாக பேரணியாக சென்ற பின்னர் அந்த பேரணி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அப்போது திடீரென போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தடியடியால் குழந்தைகள் , சிறுவர்களும் காயமடைந்தனர்.