அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, செப்டம்பர் மாதம் 7 ஆம் ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஊதியக்குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஊதியக் குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ சங்கம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.