I have been there once ... it will not happen again! Actress Bindhu Madhavi

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிந்து மாதவி. விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் மூலம் நடிகை பிந்து மாதவி பங்கேற்றார்.

எந்தவொரு விஷயமாக இருந்தாலும், மற்றவர்களிடம் சண்டையிடாமல், எப்போதும் ஜாலியாக பேசி பழகி வந்தார் பிந்து மாதவி. இதனாலேயே அவரை அனைவருக்கும் பிடித்து விட்டது.

தற்போது பிந்து மாதவி, புகழேந்தி எனும் நான் என்னும் படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிக்பாஸ் 2-வது சீசன் தொடங்க உள்ளது. பிக்பாஸ் அனுபவங்கள் குறித்தும் புகழேந்தி எனும் நான் படம் குறித்தும் பிந்து மாதவி பேசும்போது, இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். 

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும் என்றார்.

பிக்பாஸ் அனுபவம் குறித்து பேசுகையில், வாழ்க்கையில் ஒருமுறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன்.

அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது. அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால், எப்போதாவது விருந்தாளிபோல அழைத்தால் போகலாம் என்றார்.

பிக்பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்று போட்டியாளர்களுக்கு நடிகை பிந்து மாதவி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.