Asianet News TamilAsianet News Tamil

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தொடரும் சோதனை: சட்ட நடவடிக்கையா? அரசியல் நாடகமா?

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தொடரும் சோதனை சொத்துக்குவிப்பு சட்டப்படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என 41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

IT Raids in G Square: Legal action or political drama?
Author
First Published Apr 27, 2023, 6:50 PM IST | Last Updated Apr 27, 2023, 7:23 PM IST

கடந்தாண்டு மே மாதம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளும் கட்சியின் அதிகாரம் மிக்க குடும்பத்துக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனக் குற்றம்சாட்டினார். ஈசிஆர் சாலைக்கு ஜி ஸ்கொயர் சாலை என பெயர் சூட்டியிருக்கலாம் என்ற அவர், “சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது. அந்த நிறுவனத்துக்கு நில ஒப்புதல் வழங்க விதிகள் மாற்றப்பட்டுள்ளன" எனவும் கூறியிருந்தார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஜி ஸ்கொரியர் நிறுவனம், திமுகவுக்கும் தங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் நான்காவது நாளாக நடைபெறுகிறது. இதுவரை 10 இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

G Square: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 4 வது நாளாக தொடரும் ரெய்டு..! முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்

IT Raids in G Square: Legal action or political drama?

வருமானவரித்துறை சோதனை

2012ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் சென்னையில் கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இது தவிர கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மைசூர், ஹைதராபாத் மற்ற மாநில நகரங்களிலும் கிளைகளைக் கொண்டிருக்கிறது

ஆண்டுதோறும் சுமார் 56 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிவந்த இந்நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்ததும் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் வரி ஏய்ப்பு செய்திருப்பதாவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஜி ஸ்கொயர் பெயர் வெளியே வந்துள்ளதால் புதிதாக ஆறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முதல்வரின் மருமகன் சபரீசன் மற்றும் மகள் உள்ளிட்டோர் இயக்குனர்களாக இருக்கின்றனர்” என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுகவிற்கு செக் வைக்கிறதா மத்திய அரசு..! ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி சோதனை

IT Raids in G Square: Legal action or political drama?

கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்தக் குற்றசாட்டுகள் அடிப்படையில் வருமானவரித்துறையினர் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.சென்னையில் மட்டும் 21 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏசியாநெட் தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தொடரும் சோதனை ஏன்? என்று கேட்டிருந்தோம். அதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்களில் 41 சதவீதம் பேர் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீது சொத்துக்குவிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைதான் இந்த ரெய்டுக்குக் காரணம் என்று 21 சதவீதம் பேர் நினைக்கிறார்கள். ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு திமுகவுடன் உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்கவே ஐடி ரெய்டு நடப்பதாக 17 சதவீதம் பேர் கருதுகிறார்கள். வருமான வரித்தறை சோதனை என்பது அரசியல் நாடகம் என 20 சதவீதம் பேர் கூறுகிறார்கள். ஒரு சதவீதம் பேர் தங்கள் மாறுபட்ட சொந்தக் கருத்துகளை பதிவுசெய்துள்ளனர்.

PAN Card: ஒருவர் எத்தனை பான் கார்டு வைத்துக்கொள்ளலாம்? மீறினால் என்ன தண்டனை?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios