Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை மிரட்டும் புயல்..! முதலமைச்சர் ஸ்டாலினின் 3 நாட்களுக்கான நிகழ்ச்சிகள் திடீர் ரத்து.?

சென்னை- ஆந்திரா இடையே வருகிற 4 அல்லது 5 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கள் மேற்கொள்ளும் வகையில், முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் 3 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

It is reported that the Chief Minister events have been canceled after the storm warning was issued KAK
Author
First Published Dec 1, 2023, 4:10 PM IST

சென்னையை தாக்குமா புயல்

உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது வருகிற 3 ஆம் தேதி புயலாக வலுப்பெற்று சென்னை அருகே நிலை கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது சென்னை மசூலிப்பட்டினம் இடையே கரையை வருகிற 4 அல்லது 5 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்வுகள் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

It is reported that the Chief Minister events have been canceled after the storm warning was issued KAK

முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து.?

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுகிறது. உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, டிசம்பர் 2 ஆம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது புயல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல முதல்வர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்ட ஒரு சில நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

மசோதா மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லையே.? நீதிமன்றம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios