ராபர்ட் கால்டுவெல் பள்ளிப்படிப்பைக்கூட தாண்டவில்லை என்பது பொய்: தமிழக அரசு விளக்கம்

தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று உண்மை சரிபார்க்கும் குழு, அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

It is a lie that Robert Caldwell didn't even go through school: Tamil Nadu Fact Check Team sgb

தமிழறிஞர் 'ராபர்ட் கால்டுவெல் பள்ளிப்படிப்பைக் கூட தாண்டவில்லை' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னது பொய் என்று தமிழ்நாட்டின் உண்மை சரிபார்க்கும் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களை எழுதிய தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல். இவர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று கூறியுள்ள உண்மை சரிபார்க்கும் குழு, அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

ராபர்ட் கால்டுவெல்லின் படிப்பு குறித்துப் பரப்ப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும் என்று கூறியுள்ளது. "திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி பகுதியில் உள்ள பேராசிரியர் கால்டுவெல் ஆய்வு மையத்தின் பிரதிநிதிகள் தமிழறிஞர் கால்டுவெல்லின் கல்வித்தகுதி தொடர்பான சான்றிதழை பகிர்ந்துள்ளனர்" என்று சுட்டிக்காட்டியுள்ளது.

"அதில், 'ராபர்ட் கால்டுவெல் பி.ஏ' என்றும் திராவிட மொழிகளுக்கு அவர் ஆற்றிய சேவைகளைக் கருத்தில் கொண்டு டிப்ளமோ வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு சான்றிதழில் கால்டுவெல் எம்.ஏ. பட்டம் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் விளக்கியுள்ளது.

ஆழ்கடல் அதிசயம்! நட்சத்திர வடிவ வினோத விலங்கு உள்பட 100 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

இத்துடன் இதுபோன்ற தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டாக்டர் பட்டம் பெற்ற கால்டுவெல்:

இதனிடேயே,  தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல பிஷப் பர்னபாஸ், ராபர்ட் கால்டுவெல் டாக்டர் பட்டம் பெற்றவர் என்று ஆதாரம் காட்டியுள்ளார்.

"அயர்லாந்து நாட்டில் பிறந்த கால்டுவெல் 1838-ல் கப்பலில் இந்தியா வந்து, தமிழ் பயின்றார். 1841-ல் திருநெல்வேலி மாவட்டம்இடையன்குடிக்கு வந்தார். 1856-ல்இங்கிலாந்து விக்டோரியா மகாராணியிடம் கவுரவ டாக்டர் (மதிப்புறு முனைவர்) பட்டத்தை கால்டுவெல் பெற்றுள்ளார். அதேஆண்டில் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டமும் பெற்றுள்ளார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ராபர்ட் கால்டுவெல் பள்ளிப்படிப்பைக்கூடத் தாண்டவில்லை என்றார். "ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் உண்மையை செல்லவில்லை. யார் இந்த கால்டுவெல் என மக்கள் கேட்கிறார்கள். கால்டுவெல் படித்தது வேறு, எழுதியது வேறு" என்றும் கூறினார்.

தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் கடன் உடனே கிடைக்கும்... மத்திய அரசு காட்டும் ஈஸியான வழி இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios