ஆளுநர் ரவியின் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்.? தமிழக பட்ஜெட் எப்போது.? வெளியான தகவல்
திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கிடையே மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்துவரை ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டமானது. ஆண்டின் முதல் மாதம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கூடும். ஆனால் ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட தொடர் அரசு விடுமுறை, முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன.
எனவே ஜனவரி மாதம் சட்டசபை கூட்டத்தை கூட்ட முடியவில்லை. அதே நேரத்தில் ஆளுநர் ரவியோடு தமிழக அரசு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆளுநர் உரையின் போது தமிழக சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட வார்த்தைகளை பேச ஆளுநர் மறுத்தார்.
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம்
இந்தநிலையில் இந்தாண்டு ஆளுநர் இல்லாமல் கூட்டம் கூட்ட தமிழக முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24-ந் தேதி அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். அதில், 9.1.2023 அன்று தொடங்கி நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர், இந்த அறிவிப்பாணை வெளியான தேதியோடு முடித்து வைக்கப்படுகிறது என்று கவர்னர் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டது.
எனவே, இந்த ஆண்டு தொடங்க உள்ள சட்டசபை கூட்டத் தொடருக்கான புதிய உத்தரவை, அரசு கேட்டுக் கொண்ட தேதியில் கவர்னர் ஆர்.என்.ரவி பிறப்பிப்பார். இந்த நிலையில் கூட்டத் தொடரின் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின்பிப்ரவரி 7-ந் தேதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பட்ஜெட் தேதி .?
எனவே இந்த ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டத் தொடர், பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதிசட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்றும் 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்