நான்தான் ஞானசேகரன்.! கைதானவர் திமுகவே இல்லை.? வெளியான புதிய தகவல்

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி ஞானசேகரன் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் திமுக நிர்வாகி என பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டினர். ஆனால் திமுக தரப்பு இதை மறுத்துள்ளது.

It has been reported that DMK executive Gnanasekaran was not the one who sexually assaulted the Anna University student KAK

கல்லூரி மாணவிக்கு பாலியல் கொடுமை

தமிழகத்தில் முதன்மையான பல்கலைக்கழகமாக இருப்பது அண்ணா பல்கலைக்கழகம், இந்த கல்லூரியில் படிக்க மாணவர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவி ஒருவரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆரியில் வெளி வந்த தகவலில்,  மாணவி கடந்த 23ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் தனது காதலனோடு தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் என தெரியவந்தது.

It has been reported that DMK executive Gnanasekaran was not the one who sexually assaulted the Anna University student KAK

யார் இந்த ஞானசேகரன்.?

ஞானசேகரன் திமுக நிர்வாகி என பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றச்சாட்டை தெரிவித்தனர். மேலும் உதயநிதி, மா. சுப்பிரமணியனோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டனர். அது மட்டுமில்லாமல் திமுகவினர் நடத்திய நிகழ்சிகளில் டி ஞானசேகரன் என்ற பெயரும் இடம்பெற்றிருந்த விளம்பரத்தை வெளியிட்டனர். எனவே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டது திமுக நிர்வாகி என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டு திமுக தலைமை தொடர்ந்து மறுத்து வந்தது. திமுகவிற்கும் இந்த ஞானசேகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையென கூறப்பட்டது. இருந்த போதும் அதிமுகவும் பாஜகவும் தொடர்ந்து குற்றச்சாட்டை புகைப்பட் ஆதாரத்தோடு வெளியிட்டனர்.

இந்த பரபரபான சூழ்நிலையில் அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதாரமாக காட்டிய விளம்பர நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள ஞானசேகரன் நான் தான் என ஒருவர் யூ டியூப் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் சைதை கிழக்கு பகுதியின் துணை அமைப்பாளராக தான் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தான் திமுகவில் பல ஆண்டுகாலமாக இருந்து வருவதாகவும், பெரியார், அண்ணா,  கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும், எனவே எனது பெயரைத்தான் தவறாக பாஜக மற்றும் அதிமுகவினர் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என கூறிவருவதாக தெரிவித்துள்ளார்.

It has been reported that DMK executive Gnanasekaran was not the one who sexually assaulted the Anna University student KAK

மறுக்கும் திமுகவினர்

மேலும் கோட்டூர்புரம் திமுக வட்டச்செயலாளர்கள் கூறுகையில் மாணவர் அணியில் பொறுப்பு வழங்குவதற்கு டிகிரி படித்திருக்க வேண்டும் எனவும், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரம் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதாக தெரிவித்தார். எனவே கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை, திமுக உறுப்பினரே இல்லையென தெரிவித்தனர். மேலும் விஐபிக்கள் வரும்போது அருகில் நின்று செல்பி படம் எடுப்பது அனைவருக்கும் வழக்கம். அதே போலத்தான் திமுக மூத்த நிர்வாகிகளோடு புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios