Asianet News TamilAsianet News Tamil

MK Stalin : ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்.! யாரையெல்லாம் சந்திக்கிறார் தெரியுமா.?

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பது உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

It has been reported that Chief Minister Stalin will go to America on the 27th KAK
Author
First Published Aug 5, 2024, 1:05 PM IST | Last Updated Aug 5, 2024, 1:16 PM IST


தமிழகத்திற்கு முதலீடு ஈர்ப்பு

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவிற்க்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான், ஸ்பெயின், துபாய் என பல நாடுகளுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம் பல ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளுத. இந்த நிலையில் அதனை மேலும் அதிகரிக்கும் வகையில், வருகிற (ஆகஸ்ட் மாதம்) 27ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு மத்திய அரசு தரப்பில் அனுமதி கேட்கப்பட்டதையடுத்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Market today | உலகளாவிய பங்குகளில் சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி! சர்ரென சரிந்த ரூ.17 லட்சம் கோடி!

அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்

அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசிடம் இருந்து முறைப்படி அனுமதி கிடைக்கப்பட்டதையடுத்து  15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதல்மைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளையும் சந்திக்கிறார். மேலும் அமெரிக்க பயணத்தின் போது மூன்று அல்லது நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்காவில் நடைபெறவுள்ள தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு  தொழில் அதிபர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார் . மேலும் இந்த பயணத்தின் போது அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios