தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று மின்சார வாரியம் ளிக்கமளித்துள்ளது.

இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது
மட்டுமல்லாது மின் கட்டணம் போன்ற புதிய பட்டியலும் வெளியிடப்பட்டது.

சமூக ஊடகங்களில் வெளியான இந்த தகவல், மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எந்தளவுக்கு உண்மை என்பதை பொதுமக்கள் அறியாமல்
குழப்பத்தில இருந்தனர்.

இந்த நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று மின்சார வாரிய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மின்சார அதிகாரிகள் அளித்த விளக்கம்: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தி என்றனர். புதுச்சேரியில் வெளியான கட்டண உயர்வை சிலர் திரித்து, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடப்பப்பட்டது.

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்னால் பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம்தான் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

அதன் பின்னரே அரசின் ஒப்புதலைப் பெற்று, கட்டண உயர்வு அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.