ரேஷன் கடைகளில் கோதுமை கிடைக்கவில்லையா? உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!
குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டதால் கோதுமை ஒதுக்கீட்டு குறைத்துவிட்டது. தமிழக அரசு சுட்டிக்காட்டி அதனை சரிசெய்துள்ளது.

வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரேஷன் கடைகளில் சில பொருட்களை கூடுதலாக விலை இல்லாமல் வழங்க இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், கோதுமை குறித்த புதிய செய்தி கிடைத்துள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால், இன்னும் இரண்டு மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, மற்றும் பாமாயிலை விலையில்லாமல் கொடுக்கலாமா என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்று அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.
இப்போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இது தவிர கிலோ ரூ.25 விலையில் 2 கிலோ சர்க்கரை, ரூ.30 விலையில் துவரம் பருப்பு, ரூ.25 விலையில் பாமாயில் ஆகியவை விற்கப்படுகின்றன. இந்நிலையில், பாமாயில் மற்றும் துவரம் பருப்பை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இலவசமாக வழங்க பரிசீலிக்கப்படுகிறது.
தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் ஈட்ட எப்படி முதலீடு செய்யலாம்?
இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஏற்பட்டுள்ள திடீர் கோதுமை தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த மாதம் தமிழகத்திற்கு வழங்கும் கோதுமை அளவை 1,038 டன்னாகக் குறைத்தது. இதனால் தான் ரேஷன் கடைகபளில் அனைவருக்கும் கோதுமை கிடைக்காத நிலை உருவாகியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக உணவுத்துறை சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டுக்கு வழக்கம்போல கோதுமையை வழங்க வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசியிருக்கிறார்கள். இதனால், மீண்டும் தமிழகத்துக்கு 8500 டன் கோதுமை வழங்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டதால் கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது. அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்ற பிறகு தவறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து வழக்கம்போல மாதம்தோறும் 8,500 டன் கோதுமை தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.
வில்வித்தை உலகக் கோப்பை: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர்!