Asianet News TamilAsianet News Tamil

பாலில் கலப்படம் உள்ளதா? பரிசோதனை முகாமில் ஏராளமான மக்கள், கால்நடை வளர்ப்போர் பங்கேற்பு...

Is there a contamination in milk? Large population and livestock participation in the test camp
Is there a contamination in milk? Large population and livestock participation in the test camp...
Author
First Published Feb 22, 2018, 10:24 AM IST


தருமபுரி

தருமபுரியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பால் கலப்பட இலவச பரிசோதனை முகாம் நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பால் கலப்பட இலவச பரிசோதனை முகாம் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இதனை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் தொடங்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பிருந்தா ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு பாலின் தரத்தை ஆய்வு செய்தனர்.

பாலில் சோடா உப்பு, ஐட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதி பொருட்களின் கலப்படம் உள்ளதா? என்று பால் தரபரிசோதனை செய்யும் நவீன கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது.

இந்த முகாமில் மக்கள், கால்நடை வளர்ப்போர் என ஏராளமானோர் பங்கேற்று பாலின் தரத்தை பரிசோதனை செய்து கொண்டனர்.

அதேபோன்று, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பால் கலப்பட இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவ் பிருந்தா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி ஆகியோர் நவீன கருவி மூலம் பாலில் கலப்படம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும், தரமான பால் எவ்வாறு இருக்கும்? தரமற்ற பால் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து முகாமில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios