Asianet News TamilAsianet News Tamil

சுதந்திர தினத்தன்று இதை தடுக்கக்கூடாது... மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு!!

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். 

irai anbu wrote letter to all district collectors regarding hoisting of the national flag on independence day
Author
Tamilnadu, First Published Aug 12, 2022, 9:05 PM IST

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திர தினத்தன்று தலைமை செயலகம் முதல் கிராம ஊராட்சி வரை அனைத்து தலைமை அலுவலகம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றிவைப்பது மரபு. ஒரு சில கிராமங்களில் சாதிய பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசிய கோடியை ஏற்றுபவரையோ அல்லது அதனை ஏற்றுபவர்களை அவமதிக்கும் செயலோ  நடைபெறலாம் என தகவல்கள் வந்துள்ளது. எனவே இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்டத்தின் படி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் சொல்லுமா பள்ளிக்கல்வித்துறை?

மேலும் அது எந்த வடிவத்தில் செயல்பட்டாலும் அதனை தடை செய்யவேண்டும். தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 1989 ஆம் ஆண்டு சட்டத்தின் படி பட்டியலினத்தவர், பழங்குடியினர் அல்லாத எவரும் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தவர், பழங்குடியினத்தை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி தலைவர், உறுப்பினர் அலுவலக பணியில் இருக்க கூடிய எவரையும் அவர்களதுஅலுவலக பணிகளையும், கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பது அல்லது அச்சுறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதையும் படிங்க: மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

இதனை கருத்தில் கொண்டு வரும் 75 ஆவது சுதந்திரத்தின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு அனைத்து கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்யவேண்டும். இதனை தொடர்ந்து சுதந்திரத்தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்வதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் போதுமான காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளை கையாளுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அல்லது அலுவலர்களை அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios