Asianet News TamilAsianet News Tamil

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் சொல்லுமா பள்ளிக்கல்வித்துறை?

11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

school education dept is planning to cancel the 11th public exam
Author
Tamilnadu, First Published Aug 12, 2022, 8:24 PM IST

11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சென்னை கோட்டூர்புரம்‌, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில்‌ பள்ளிக்‌ கல்வித்துறையின்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்‌ மற்றும்‌ பயிற்சி இன்றும் நாளையும்‌ நடைபெறுகிறது. இதில் தொடக்கக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சமக்ர சிக்‌ஷா, பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: எல்.இ.டி பல்பை விழுங்கிய 10 மாத குழந்தை.. மூச்சு குழாயில் சிக்கிய பல்பு.. ஒரு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை..

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்தில், 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து 3 பொதுத் தேர்வுகளை ஆண்டுதோறும் எழுதுவதால் உளவியல் அழுத்தம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், அதனால் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: லுங்கி அணிந்து கமிஷ்னர் அலுவலகம் வருவதற்க்கு தடையா..? ஜெய்பீம் ராஜகண்ணு உறவினருக்கு அனுமதி மறுத்த காவல்துறை

கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்த ஊரடங்கு ஆகியவற்றால் மாணவர்கள் மத்தியில் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11, 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் சுமையைக் குறைப்பது பற்றியும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தை தவிர பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios