investigation on kodanadu security murder case

கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தகட்ட விசாரணைக்காக அவர்களை கோவை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் எஸ்டேட்டான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு ஓம் பகதூர் எனபவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவரை நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு தப்பி சென்றது. மேலும் மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வயநாடு, திருச்சூர், மலப்புரம் பகுதியை சேர்ந்த 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தகட்ட விசாரணைக்காக அந்த 8 பேரையும் கோவை அழைத்துவர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.