கேபிள் டிவி இணைப்புடன் நகராட்சி பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இணையதள திட்டத்தினை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அரசு கேபிள் டிவி நிறுவனம், இல்லம் தோறும் இணையதள திட்டத்தினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இண்டர்நெட் சேவையை வழங்க தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கான விண்ணப்பங்களை www.tactv.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 15 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.