Asianet News TamilAsianet News Tamil

மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 800 ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 800 ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Interim stay on filling up of 800 vacant posts in People's Welfare Department: High Court orders
Author
First Published Jun 9, 2023, 12:10 AM IST

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையில் தற்காலிக அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 65 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் “ கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் வழங்கும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் திறனற்ற திமுக அரசு - அண்ணாமலை பாய்ச்சல்

ஆனால் எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது அரசு எந்த முடிவும் எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறது. அதே நேரம், மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 800 ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், ஓட்டுநர் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு எம்.எஸ் ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழக மக்கள் நல வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 800 ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பணி நீக்கம் செய்யவும் இடைக்கால தடை விதித்தார். இந்த மனு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மின்கட்டண உயர்வு பொதுமக்களையே பாதிக்கும் என்பது விடியா திமுக அரசுக்கு புரியாதா? டிடிவி தினகரன் சாடல்

Follow Us:
Download App:
  • android
  • ios