Interim ban for Actor association building

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

நடிகர் சங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தியாகராயர் நகரில் மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே பொதுசாலையில் 33 அடியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக ஆய்வு நடத்த ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், ஆணையர் ஆய்வறிக்கையை அளிக்கும் வரை எந்த கட்டுமானப்பணிகளும் நடைபெறக் கூடாது என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும் இவ்வழக்கு மீதான விசாரணை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.