Inspector munisekar met periya pandi family

பெரிய பாண்டி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்ட முனிசேகர்… தவறுதலாக சுட்டுவிட்டதாக விளக்கம் !! .ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது நான்தான் தவறுதலாக பெரிய பாண்டியை சுட்டுவிட்டேன் என அவரது குமும்பத்தினரிடம் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் நேரில் சென்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் மூன்றரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற நாதுராம் மற்றும் தினேஷ் அடங்கயி கொள்ளைக் கூட்டத்தை ராஜஸ்தான் சென்று பிடிக்க முயன்றபோது, மதுரவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

முதலில் கொள்ளையன் நாதுராம்தான் பெரிய பாண்டியை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது. ஆனால் பின்னர் நடைபெற்ற விசாரணையில், கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது. இன்ஸ்பெக்டர் முனிசேகர்தான் தவறுதலாக பெரிய பாண்டியை சுட்டுவிட்டதாக தெரிய வந்ததது.

கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, ஆய்வாளர் பெரியபாண்டியனுடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை சுட்டுள்ளார். ஆனால் அது குறி தவறி பெரியபாண்டியன் மீது பட்டு அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இது குறித்து ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, நான்தான் தவறுதலாக சுட்டுவிட்டேன் என்று, அவரது குடும்பத்தாரிடம், ஆய்வாளர் முனிசேகர் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லையில் பெரிய பாண்டியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்த காவல் ஆய்வாளர் முனிசேகர் பெரிய பாண்டியின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பெரிய பாண்டியன் குடும்பத்தினரிடம் தனிப்படையினர் 5 மணி நேரம் விளக்கம் அளித்தனர்.

அப்போது, கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, நான்தான் தவறுதலாக பெரிய பாண்டியனை சுட்டுவிட்டதாகக் கூறிய முனிசேகர், அவரது குடும்பத்தினரிடம் மிகவும் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.