Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி யார்.? இறுதி கட்ட ரேசில் இருக்கும் பெயர்கள் என்ன.? வெளியான தகவல்

தமிழகத்தின் அடுத்த புதிய தலைமைசெயலாளர் மற்றும் டிஜிபி பதவி இடங்களுக்கான பெயர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி கட்ட ரேசில் இருக்கும் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது. 
 

Information regarding the new Chief Secretary and DGP of Tamil Nadu has been released
Author
First Published Jun 23, 2023, 10:31 AM IST

தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்.?

தமிழ்நாட்டில் அரசு செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தலைமை பொறுப்பில் இருப்பவர் தலைமைச் செயலாளர், இதே போல காவல்துறையில் உள்ள காவலர்களுக்கும் சட்டம் ஒழுங்கை கண்காணிப்பதிலும் முக்கிய பொறுப்பு டிஜிபி உடையது. இந்தநிலையில் தமிழகத்தில் தலைமைச்செயலாளராக இருக்கும் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனையடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், மூத்த அதிகாரிகளின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வந்த நிலையில் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

Information regarding the new Chief Secretary and DGP of Tamil Nadu has been released

ஐஏஎஸ் அதிகாரிகளுக்குள் போட்டி

புதிய டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக தலைமைச் செயலர் இறையன்பு  1988ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமைச் செயலர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மூன்று பேர் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போதைய தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக  தலைவராக உள்ளார். அடுத்தது, 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த்துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

Information regarding the new Chief Secretary and DGP of Tamil Nadu has been released

புதிய தலைமை செயலாளர் யார்.?

மூன்றாவது, இதே 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார். இதில், ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும்,  சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார். இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச்செயலராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முதலமைச்சரும் இவரது பெயரையே டிக் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

Information regarding the new Chief Secretary and DGP of Tamil Nadu has been released

டிஜிபி ரேசில் யார்.?

இதே போல தமிழகத்தில் அடுத்த டிஜிபியும் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறையில் நேரடியாக ஐபிஎஸ் தேர்வில் தேர்வாகி பணியாற்றும் அதிகாரிகளின் உச்சபட்ச கனவு அவர்கள் வேலை பார்க்கின்ற மாநிலத்தின் டிஜிபி ஆவதுதான், ஒரு மாநிலத்தின் டிஜிபியை மத்திய அரசின் கீழ் செயல்படுகின்ற மத்திய பணியாளர் தேர்வாணைய குழு தான் முடிவு செய்கிறது.இந்தநிலையில் 1990 ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாரியில் முதலாவதாக இருப்பது டிஜிபியும் சென்னை மாநகர காவல் ஆணையருமான சங்கர் ஜுவால் தான்,  

Information regarding the new Chief Secretary and DGP of Tamil Nadu has been released

சஞ்சய் அரோராவா.?சங்கர் ஜுவாலா

இவருக்கு அடுத்தபடியாக இந்த பேட்ஜில் இரண்டாவது அதிகாரியாக இருப்பவர் ஏ கே விஸ்வநாதன் , தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இவரும் தமிழகத்தின் அடுத்த டிஜிபி காண போட்டி பட்டியலில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் தமிழகத்தின் அடுத்த டிஜிபிக்கான ரேசில் நேரடியான போட்டி டெல்லி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கும், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவாலுக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.  எனவே தமிழகத்தின் அடுத்த தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி பதவிகளை பிடிப்பது யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது. 

இதையும் படியுங்கள்

ஜூன் 23ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மறக்க முடியாத நாள்? என்ன காரணம் தெரியுமா? பிளாஸ்பேக்

Follow Us:
Download App:
  • android
  • ios