indiri bannerjee appointed as new justice
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கபட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் கடந்த 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்தவர் என்ற சாதனையை படைத்த சஞ்சய் கிஷன் கவுல், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக குலுவாடி ரமேஷ் நியமிக்கப்பட்டார்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அதிகாரப்பூர்வமாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த இந்திரா பானர்ஜி
1985 ஆம் ஆண்டு கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக இந்திரா பானர்ஜி பதிவு செய்தார். வழக்கறிஞர் பணியில் நீண்ட அனுபவம் பெற்ற பானர்ஜி, கடந்த 2002 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அதன்பிறகு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்.
