ஒடிசா ரயில் விபத்தில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் அடையாளம் காணப்படாத உடல்களை உறவினர்கள் அடையாளம் கண்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி விபத்தில் சிக்கியதில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 290 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதனிடையே தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்திருக்க கூடும் என முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 80க்கும் மேற்பட்ட உடல்களை இன்னும் அடையாள காணமுடியாத நிலையானது நீடித்து வருகிறது. இந்தநிலையில் அடையாளம் காண முடியாத உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ரயிவ்வே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய ரயில்வே அறிவிப்பு
இது தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் அளித்துள்ள ரயில்வேத்துறை, பஹாநாகா பஜார் (பாலசோர்) ரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுடைய அனைத்து உறவினர்களின் /மரணமடைந்தவர்களுடைய வாரிசுகளின் கவனத்திற்கு. இந்திய ரயில்வேத்துறை, ஒடிசா மாநிலத்தில், பஹாநாகா பஜார், மாவட்டம் – பாலசோர் பகுதியில் அண்மையில், 02.06.2023 தேதி அன்று. 12841 ஷாலிமார் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கொரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் 12864 SMVB ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள்,
மோதிக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட ரயில் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் அனைத்து உறவினர்களும் மரணமடைந்தவர்களின் வாரிசுகளும் தாமாக முன்வந்து தங்களது மரபணு மாதிரிகளை (DNA) samples) அளித்து மரணமடைந்தவர்களுடன் தங்களின் உறவுகளை உறுதி செய்து அடையாளம் காண முடியாத உடல்களை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
நேரு நினைவு அருங்காட்சியம் நூலகம் பெயர் மாற்றம்; காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜேபி நட்டா!!
