படுகுழியில் தள்ளிய பாஜக... நாட்டை மீட்க இந்தியா கூட்டணி ஆட்சி வரவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தேர்தல் வரும்போது மட்டும் மக்கள் மீது கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம் கொண்டவர் மோடி என்று கூறிய முதல்வர், "நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்கவே இந்தியா கூட்டணியை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

India Alliance must come to power to save the country from the BJP: MK Stalin Speech in Srivilliputhur sgb

நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்க இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். திமுக அரசு தாயைப்போல மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சொன்னதை செய்ததால்தான் உங்கள் முன் கம்பீரமாக வந்து உரிமையோடு வாக்கு கேட்கிறேன். அலை அலையான மக்களின் ஆதரவே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ளது. தாய்வீட்டுச் சீர் போல பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட முத்தான மூன்று திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று முதல்வர் கூறியுள்ளார்.

இலவசங்கள் தேவையா? மக்களின் மனது மாறுகிறதா? ஆச்சரியம் அளிக்கும் ஏசியாநெட் நியூஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்!!

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். பாஜகவை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், "சமூக நீதிக்கு பாஜகவால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீடுக்குத் தீங்கு இழைக்கும் கட்சி பாஜக. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வந்தபோதும் பாஜக அதற்கு மறுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, பெரும்பான்மை மக்களுக்கும் பாஜக எதிரிதான்" என்றார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய ஊழலை பாஜக செய்துள்ளது என மத்திய அமைச்சரர் நிர்மலா சீதாராமனின் கணவரே கூறுகிறார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதை பாஜக அரசால் தடுக்க முடியவில்லை. சீன பட்டாசுகளால் சிவகாசியில் ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சரிந்த பட்டாசு தொழிலை சரிசெய்ய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை" எனவும் முதல்வர் விமர்சனம் செய்திருக்கிறார்.

தேர்தல் வரும்போது மட்டும் மக்கள் மீது கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம் கொண்டவர் மோடி என்று கூறிய முதல்வர், "நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்கவே இந்தியா கூட்டணியை அமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரதமர் மோடி சேல்ஸ்மேன் மாதிரி விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டி, வாரண்டி எதுவும் கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் சாடினார்.

வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்னாரே மோடி, அதைச் செய்தாரா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

10 ஆண்டுகால சாதனைகள் என்னென்ன? 'மூட் ஆஃப் தி நேஷன்' சர்வே முடிவுகள்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios