மாநிலங்களவைக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தொடங்கிய முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவைக்கான தேர்தல் வருகிற ஜூன் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் திமுக கூட்டணி சார்பாக 4 பேரும் அதிமுக சார்பாக 2 பேரும் போட்டியிடவுள்ளனர். திமுக சார்பாக போட்டியிடவுள்ள 3 பேயர்களை கொண்ட பட்டியிலை திமுக வெளியிட்டுள்ளது. அஅதில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திற்கும், அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள இரண்டு இடங்களுக்கும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை, இந்தநிலையில் இன்றோ நாளையோ வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்படும் என அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காத்துள்ளனர்

சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

இந்தநிலையில் தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், அகில இந்திய தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் நபராக இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று வேட்புமனு தாக்கல் செய்ததன் மூலம் இதுவரை 230 வது முறை பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். சாதாரண மக்கள் யாவரும் தேர்தலில் போட்டியிடலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தேர்தலில் வேட்புமனு செய்வதாகவும், இதுவரை தேர்தலுக்காக் மட்டும் இதுவரை ரூ 50 லட்சம் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார். உலக கின்னஸில் இடம் பெறவே தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.