Asianet News TamilAsianet News Tamil

அன்று நெல்லையப்பர்! இன்று முத்துமாரியம்மன்! தேர்களை சரிவர பராமரிக்காத திறனற்ற திமுக! களத்தில் இறங்கிய இபிஎஸ்!

முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருந்தபோது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

Incompetent DMK who do not maintain chariots properly.. Edappadi Palanisamy tvk
Author
First Published Jun 25, 2024, 8:36 AM IST | Last Updated Jun 25, 2024, 8:39 AM IST

அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோயில் தேரை அலங்கரிக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருந்தபோது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இதையும் படிங்க: EPS Vs KC Palanisamy: என்னை பற்றியா அவதூறா பேசுற.. இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு!

Incompetent DMK who do not maintain chariots properly.. Edappadi Palanisamy tvk

ஏற்கனவே, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தேரின் வடம் தேரோட்டத் திருநாளான 21.06.2024 அன்று நான்கு முறை அறுந்த சம்பவம், பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் கோயில்களின் சிறப்பு வாய்ந்த தேர்களை சரிவர பராமரிக்காத திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

Incompetent DMK who do not maintain chariots properly.. Edappadi Palanisamy tvk

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் 12 நாட்களில் நிரம்பிய உண்டியல்! அள்ள அள்ள தங்கம்! குவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொண்டு, கோயில் மற்றும் கோயில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொண்டு, பக்தர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோயில்களின் தரத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios