Asianet News TamilAsianet News Tamil

சென்னை ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரெய்டு - ரூ.1.5 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல் - தொடரும் அதிரடி...!!!

income tax-raid-tr57yr
Author
First Published Dec 22, 2016, 10:08 AM IST


ராம மோகன ராவைத் தொடந்து ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஒன்றரைக் கோடி ரூபாய் ரொக்கமும், 6 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நேற்று அதிகாலை தொடங்கி இன்று திகாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் 40 ஆவணங்கள், ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் கைப்ற்றப்பட்டன.

income tax-raid-tr57yr

இந்நிலையில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனராக பணியாற்றி  வரும் ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் இன்று, அதிகாலையிலேயே வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடததினர்.

income tax-raid-tr57yr

சென்னை பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கணக்கில் வராத ஒன்றரைக் கோடி பணமும், 6 கிலோ தங்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேகர் ரெட்டி விவகாரத்திற்கும், ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்னு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios