EDயை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்ததாக களம் இறங்கிய I.T ! 10க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ரெய்டால் பரபரப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை முற்றுகையிடும் E.D, I.T
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இதன் அடுத்தகட்டமாக அமலாக்கத்துறை களத்தில் இறங்கி செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பைனான்ஸ் நிறுவனம், கட்டுமான நிறுவனங்கள் என சோதனையானது தொடர்ந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
செல்போன் உதிரிபாகங்கள் நிறுவனங்களில் சோதனை
அமலாக்கத்துறையும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மணல் குவாரி உரிமையாளர்களின் வீடுகள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில் சோதனையை நடத்தியது. இந்தநிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இன்று வருமான வரித்துறை தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ப்ளெக்ஸ் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் சோதனையை வருமான வரித்துறை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு மாலை போட்டு ஒப்பாரி! திதி கொடுத்த கன்னட அமைப்பினர்! வைரல் வீடியோ!