பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு மாலை போட்டு ஒப்பாரி! திதி கொடுத்த கன்னட அமைப்பினர்! வைரல் வீடியோ!

பெங்களூருவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து திதி கொடுத்தும்,  அவர் உருவப் படம் முன்பாக ஆண்களும், பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

Mock Funeral of Tamilnadu CM Stalin in Ramanagara  tvk

காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து திதி கொடுத்தும் அவர் உருவப் படம் முன்பாக ஆண்களும் பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. இதனையடுத்து வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு 5,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள் மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

 

Mock Funeral of Tamilnadu CM Stalin in Ramanagara  tvk

இதற்கு கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பை முன்னிட்டு பெங்களூரு கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் ஏற்கெனவே விடுமுறை அறிவித்துவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து திதி கொடுத்தும்,  அவர் உருவப் படம் முன்பாக ஆண்களும், பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். தமிழகத்திற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்ததை தடுக்காமல் பெங்களூரு போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios