வேலூரில், அம்பேத்கர் பாடலை ''டப் ஸ்மாஷ்'' செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். அதில், ஒருவர் பள்ளி மாணவன் என்பதால் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

vellore district க்கான பட முடிவு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேவுள்ள சாத்கர் கிராமம். இங்குள்ள மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுப்பிரமணி. இவரும் இவருடைய உறவினரான ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் கடந்த 12-ஆம் தேதி அம்பேத்கர் பாடல் ஒன்றை ''டப் ஸ்மாஷ்'' செய்து நடனமாடினர். இந்த வீடியோவை வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

ambedkar க்கான பட முடிவு

இந்த வீடியோவை பேரணாம்பட்டு பகுதிக்கான வைத்திருந்த தனிப்பட்ட முகநூல் குழுவிலும் பதிவிட்டனர். இதனைப் பார்த்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பேரணாம்பட்டின் பக்கத்து கிராமங்களான கள்ளிச்சேரி, கோட்டைச்சேரி பகுதி மக்களும் இதற்கு தெரிவித்தனர். அவர்கள் சுப்பிரமணி மற்றும் ரமேஷிடம் சென்று, "அம்பேத்க்கர் பாடலை இழிவுப்படுத்துகிறாயா?" என்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

arrest க்கான பட முடிவு

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரித்துவிட்டு சுப்பிரமணி மற்றும் ரமேஷ் இருவரையும் கைது செய்தனர். சுப்பிரமணியை குடியாத்தம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

ரமேஷுக்கு 14 வயது மட்டுமே ஆவதால் அவரை வேலூரில் உள்ள இளம் சிறார் நீதிக் குழுமத்தில் சமர்ப்பித்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.