விழுப்புரம்

விழுப்புரத்தில் தொடர் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் உள்பட ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் பாலு உள்பட இந்த ஆறு பேரும் வானூரில் தொடர் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் பைக்குகள், கத்தி, வீச்சரிவாள் மற்றும் செல்போன்கள் போன்றவற்றை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆறு பேர் மீதும் வழக்குப்பதிந்த காவலாளர்கள் அனைவரையும் கைது செய்தனர். 

13 வயது சிறுவன் உள்பட அனைவருக்கும் இளவயதுடையவர்கள். இந்த சிறிய வயதில் இவர்கள் அறுவரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.