பரமக்குடி
பரமக்குடி யூனியன் கீழப்பருத்தியூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நாகேசுவரி என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு ஆதரவாக அவரது கணவர் திருப்பதி, ராஜமாணிக்கம், மற்றும் தடுத்தலாங்கோட்டை கிராம உதவியாளர் ராஜா ஆகியோர் செயல்பட்டார்களாம்.
இதற்காக இவர்கள் போலி மாற்றுச்சான்றிதழ் தயாரித்து வாக்காளர்களை சேர்த்ததாக அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் பருத்தியூர் நடராஜன் மாநில தேர்தல் ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், பரமக்குடி துணை ஆட்சியர் ஆகியோருக்கு ஆதாரத்துடன் புகார் மனு அனுப்பி உள்ளார்.
அதன் அடிப்படையில் பரமக்குடி தாசில்தாருக்கு இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தாசில்தார் ராஜகுரு விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தடுத்தலாங்கோட்டை கிராம உதவியாளர் ராஜாவை சஸ்பெண்டு செய்தார்.
மேலும் போலியாக சேர்க்கப்பட்ட 20 வாக்காளர்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பருத்தியூர் நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
