In Tiruvannamalai the tet was written by 20 thousand 823 people 685 people have not written

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை 20 ஆயிரத்து 823 பேர் எழுதினர்கள். 685 பேர் எழுதவில்லை.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் சனிக்கிழமையும், ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் ஞாயிற்றுக் கிழமையும் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் எழுத செய்யாறு கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 516 பேர், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 992 என மொத்தம் 21 ஆயிரத்து 508 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வர்களுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்கள் என மொத்தம் 53 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தகுதித் தேர்வு 2-ம் தாள் எழுதும் தேர்வர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வருகை தரத் தொடங்கினர்.

தேர்வர்கள் பெரும் சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு அறைகளுக்கு 2 பேனாக்கள், நுழைவு சீட்டு ஆகியவற்றை மட்டுமே தேர்வர்கள் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 22 பார்வையற்ற தேர்வர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

செய்யாறு கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 306 பேர் தேர்வு எழுதினார்கள். 210 பேர் தேர்வு எழுதவில்லை.

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதினார்கள். 475 பேர் தேர்வு எழுதவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளை 20 ஆயிரத்து 823 பேர் எழுதினார்கள். 685 பேர் எழுதவில்லை.

தேர்வு அறைக்கு ஒரு கண்காணிப்பாளர் என திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையத்திலும் முதன்மை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், துணை கூடுதல் கண்காணிப்பாளர் உள்பட ஐந்து பேர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் உதவி ஆய்வாளர் தலைமையின் கீழ் ஐந்து காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் பள்ளி, திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி, கலசபாக்கம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளி, காரப்பட்டு அரசுப்பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் நடந்த தேர்வை ஆய்வு செய்தார்.

தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.