ஆம்பூர்,
ஆம்பூர் தாலுகா மிட்டாளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வறட்சி பாதித்த நிலங்களை ஆட்சியர் ராமன் திடீர் ஆய்வு நடத்தினார்.
ஆம்பூர் தாலுகா மிட்டாளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வறட்சி காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.
கடந்த வருடம் மழைப் பொழிவு என்பது மிகவும் குறைந்தே காணப்பட்டது. இதனால், தமிழகத்தின் விவசாய பகுதிகள் எல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வறட்சியால் 200-க்கும் மேற்பட்ட விவசாயியகள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அதனால், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்களில் இறங்க்கினர். கடும் போராட்டத்திற்கு பிறகே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, வறட்சி பாதிப்பு கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கியது.
ஆனால், அதிலும் பாரபட்சம் நடக்கிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. பாதித்த நிலம் உள்ளவர்களை பட்டியலில் சேர்ப்பதில்லை. நிலம் இல்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளது.
மேலும், பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் பட்டியலில் சேர்க்கும்படி பரிந்துரைக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
அதில், ஆம்பூர் தாலுகா மிட்டாளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வறட்சி காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அதிகாரிகள் வறட்சி பாதித்த விளைநிலங்கள் குறித்து விவரங்களை சேகரித்தனர். இதில் சுமார் 10 எக்டேர் நிலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராமன் வறட்சி பாதித்த நிலங்களை திடீர் ஆய்வு செய்தார்.
பின்னர் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆய்வின் போது தாசில்தார் ரூபிபாய், ஒன்றிய ஆணையாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் சீனிவாசன், செந்தில் உள்பட பலர் உடன் இருந்தனர்.
