வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று  தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று (டிசம்பர் 19) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

நாளை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், இனி வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி இருக்கிறது.