Asianet News TamilAsianet News Tamil

3 பெண் பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப்.. காவல் நிலையத்தில் கதறும் கணவர்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழல் காரணமாக இளம்பெண் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

illegal love affair..Women Escape in coimbatore
Author
First Published Jul 14, 2023, 2:28 PM IST

3 பெண் பிள்ளைகளை தவிக்கவிட்டு தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்த கணவர் காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை மீட்டு கொடுக்கும் படி கதறியுள்ளார்.  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழல் காரணமாக இளம்பெண் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளைஞருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் செயல்படும்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலமாக கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனது மனைவி கண்டித்துள்ளார். 

இதையும் படிங்க;-  80 வயது கிழவியை தூக்கி சென்று பலாத்காரம்.. அலறியும் விடாமல் கஞ்சா போதையில் இளைஞர் செய்த கொடூரம்.!

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். வேலைக்கு சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அதிர்ச்சியடைந்த கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெண்ணின் கணவர் தன்னையும், தனது குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்ற மனைவியை மீட்டு கொடுக்குபடி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios