if we join 17 places of god muruga finaly comes as om

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்... 

தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும்,இன்று சிலவற்றிற்கு பதில் தெரியாமல் நம்மை என்றுமே ஆச்சர்யம் படுத்தும் பல நிகழ்வுகள் இவ்வுலகில் நடக்க தான் செய்கிறது..
நாம் எதை புதுமை என்று உற்சாகமாக வரவேற்கிறோமோ...அவை அனைத்தும் அன்றே இந்த உலகில் நடந்துள்ளது....

அதன் ஒரு பகுதியாக தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து பார்த்தால் ஏரியல் அது “ஓம் வடிவில்” உள்ளது.

ஆச்சரியம் ஆனால் உண்மை

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை எப்படி நிகழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்தால் பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது

ஓ வடிவம் எப்படி உருவாகிறது 

கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. 

அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ...

1.திருப்பரங்குன்றம்

2.திருச்செந்தூர்

3.பழநி

4.சுவாமிமலை

5.திருத்தணி

6.சோலைமலை (பழமுதிர்ச்சோலை)

7.மருதமலை

8.வடபழனி (சென்னை)

9.வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி

10.நாகப்பட்டினம் சிக்கல்

11.திருச்சி வயலூர்

12.ஈரோடு சென்னிமலை

13.கோபி பச்சமலை

14.கரூர் வெண்ணைமலை

15.கர்நாடகா குக்கே சுப்ரமண்யா

16.கர்நாடகா கட்டி சுப்ரமண்யா

17.கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

 மேல் குறிப்பிட்டு உள்ள 17 முக்கிய திருத்தலங்களை இணைத்தால்,அதிசயமாக ஓம் என்ற வடிவம் வருகிறது...முருகனுக்கே உரித்தான ஓம் வடிவம்...முருகனின் திருத்தலங்களை இணைத்தாலே வருகிறது என்பது ஆச்சர்யம் தான்.