பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் தனது உத்தரவில் நீதிமன்ற குறிப்பிட்டுள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கட்டுமானம் தங்கள் சொத்துக்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாக கூறி பாப்பாயி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோவிலுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோவில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் தனது உத்தரவில் நீதிமன்ற குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட பொது பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் பொது சாலையை யார் ஆக்கிரமித்தாலும், கோவிலாக இருந்தாலும், அதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளதாக கூறியுள்ள நீதிபதி, பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
