Asianet News TamilAsianet News Tamil

அதிகமான குடும்பத்தகராறுக்கும் குற்றச்செயலுக்கும் காரணமே இதுதான்.. - வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்...!

if divorce s happened by mobile phone
if divorce s happened by mobile phone
Author
First Published Mar 10, 2018, 6:32 PM IST


செல்போன்கள் குடும்பத்தினர்கள் இடையே பிரிவை ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

கோயம்புத்தூர் அன்னூரில் இண்டஸ் டவர்ஸ் நிறுவன செல்போன் டவரை அகற்றும்படி பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது. 

பேரூராட்சியின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், செல்போன்கள் டவர் அமைக்க போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு ஆணையிட்டுள்ளனர். 

மேலும் செல்போன்கள் குடும்பத்தினர்கள் இடையே பிரிவை ஏற்படுத்துவதாகவும் கர்ணனின் கவச குண்டலம் போல் மக்களின் உடல் அங்கமாக செல்போன்கள் மாறிவட்டதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

பல்வேறு குற்றச்செயல்களுக்கு செல்போன்கள் தான் முக்கிய காரணமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது. 

Follow Us:
Download App:
  • android
  • ios