உலகையே ஆட்டிப்படைத்து வரும் ப்ளூவேல் விளையாட்டு தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தியாவுக்குள் நுழைந்த இந்த ப்ளூவேல் விளையாட்டு, தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இந்த விளையாட்டால், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த மாணவரின் துயரச் செய்தி அடங்கும் முன்பே புதுச்சேரியில் ஒரு மாணவர் உயிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ப்ளூவேல் விளையாட்டை தடை செய்யக்கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு
தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ப்ளூவேல் விளையாடுபவர்கள், அதற்குரிய லிங்க்-ஐ வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஷேர் இட்-ல் பகிர்பவர்கள் சைபர் கிரைம் மூலம் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைகள், லேப்டாப், ஸ்மார்ட்போன்ஸ், டேப்லட் பயன்படுத்துகையில் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் ரோகிணி கேட்டுக் கொண்டுள்ளார்.