I will point out the grievances Tamil Nadu businessmen by GST - Chief Minister Palanisamy

காஞ்சிபுரம்

ஜி.எஸ்.டியால் தமிழக வணிகர்களுக்கு ஏற்படும் குறைகளை மத்திய அரசிற்கு சுட்டிக் காட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஆரணியில் நடைபெறும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார்

சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்சீபுரம் வழியாக ஆரணிக்குச் செல்லும்போது, காஞ்சீபுரம் நகர எல்லையான பொன்னேரிக்கரையில் முதலமைச்சரை காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் வரவேற்றனர்.

வரவேற்பை ஏற்றப்பின் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியது: “சரக்கு, சேவை வரியால் தமிழக வணிகர்களுக்கு ஏற்படும் குறைகள் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டி, வரியை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தார்.