அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாகவும், அதிமுக அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் டிடிவி தினகரனை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி அணியின் இந்த அறிவிப்பால், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறும்போது, தினகரன் நீக்கம் வருத்தம் அளிப்பதாக கூறினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, சி.ஆர். சரஸ்வதி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தினகரன் நீக்கம் வருத்தம் அளிப்பதாகவும், அதிமுக அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.